Posts

Showing posts from February 3, 2024
Image
  பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்.. உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்..! நாளை நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் மொழிவழி சிறுபான்மையின மாணவர்களுக்கு கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்பிறகு, ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்க் கட்டாயத் தகுதித் தேர்வு புயல்-மழை காரணமாக பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இதனிடையே, தமிழ் மொழிக்கு கட்டாயத் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், முதன்மைத் தேர்வுக்கு அனுமதி வழங்கக் கோரியும், 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைச் சட்டத்தில் திருத்தம் செய்து அறிவிக்கக் கோரியும் மொழியியல் சிறுபான்மையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Image
  தமிழ்நாடு அமைச்சுப்பணியில் 2486 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!   Tamil-Nadu-Ministerial-Job-Recruitment-2024 தமிழ்நாடு அமைச்சுப்பணியில் 2486 இளநிலை உதவியாளர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் அறிவிப்பு 28.02.2024 வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் Examல் கலந்து கொண்டு பயனடையவும். இந்தப் பணியிடங்கள் Exam அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  Tamil Nadu Ministerial பணியிடங்கள்: இப்பணிக்கான   2448 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு கல்வி தகுதி 10th / Degree படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும். வயது வரம்பு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது  பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். இப்பணிக்கு ஊ
Image
  குரூப் 2 தேர்வர்களே டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு.. மறந்தும் இதை மிஸ் பண்ணிடாதீங்க குரூப்-2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 1:2, 1:3 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு 327 பேர் கொண்ட பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் வரும் நேர்முகத் தேர்வுடன் கூடிய 116 குரூப்-2 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இதேபோல் நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத 5 ஆயிரத்து 413 குரூப்-2ஏ பதவிகளுக்கும் அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-
Image
  விழுப்புரத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.01.2024 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 31.12.2023 அன்றைய தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும்,
Image
  தமிழக நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலி இடங்கள்: விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள 1933 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள 1933 காலிப் பணியிடங்களுக்கு வருகிற 9ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உதவியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதள பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.