Posts

Showing posts from April 23, 2013
"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்பு திருப்புவனம்: ஆங்கில வழி கல்வி துவக்கத்தை அறிவிக்கும் பொருட்டு, திருப்புவனம் அருகே, அரசு பள்ளியில், கனிவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தமிழ் வழிக் கல்வியில் சேர்ப்பதை விட, ஆங்கில வழியில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம், கிராமத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கிராமத்துஅரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து, ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.  சேர்க்கை குறைவை தடுக்கவும், வரும் கல்வி ஆண்டு முதல், ஆங்கில வழிக்கல்வி துவக்கத்தை உணர்த்தும் வகையிலும், சிவகங்கை திருப்புவனம் புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  இதில், "மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க; கல்வி தொடர்பான அனைத்தும் இலவசம்" என, விளம்பரப்படுத்தி உள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா? பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.  பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில்,முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்தபள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.  இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர்.  ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. அரசு பள்ளிகளில், மேல்