Posts

Showing posts from March 21, 2024
Image
  கணித தேர்வில் எளிதாக சென்டம் பெறலாம் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து பிளஸ் 2 கணிதத்தேர்வில் வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால் நன்றாக படித்த மாணவர்கள் எளிதாக சென்டம் பெறலாம். சராசரி மாணவர்களும் 70 மதிப்பெண் பெறலாம் என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவர் ப.முருகன், கணித ஆசிரியர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி:  நீண்ட வருடங்களுக்குப்பிறகு வினாத்தாள் மிக எளிதாக அமைந்துள்ளது. அதிக கவனம் செலுத்தி படித்த மாணவர்கள் இத்தேர்வில் சென்டம் எடுப்பது உறுதி. மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வாய்ப்பு அதிகம். ஒரு மதிப்பெண் வினாவில் 17 வினாக்கள் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று வினாக்கள் பயிற்சி செய்து விடையளிக்கும் வகையில் இருந்தது.3 மதிப்பெண் வினாக்களில் ஒரு கட்டாய வினா மட்டும் கிரியேட்டிவ் வினாவாக அமைந்திருந்தது. அதுவும் எளிதாக தீர்வு காணும் வகையில் இருந்தது. இந்த தேர்வில் நன்றாக பயிற்சி செய்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள். சென்டம் எடுக்க வாய்ப்பு ஜெ.எஸ்.டிம்பிள், கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல