Posts

Showing posts from October 24, 2013
தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள 26.10.2013 அன்று சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.  DEE - COURT CASE REG REVIEW MEETING ON 26.10.2013 AT CHENNAI PRESIDED BY DEE
இரட்டைப்பட்ட வழக்கு வழக்கம் போல் வருகிற (30.10.2013)புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.      இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 35ல் விசாரணைக்குவந்த இரட்டைப்பட்டம் வழக்கு சரியாக பிற்பகல் 2.25க்ககு அதன் எல்கையை தொட்டது. அதற்கு முன்னும், பின்னும் ஒரு பெரிய குழு விசாரணை நிலுவையில் இருந்ததால் வழக்கம் போல் வருகிற 30.10.2013- புதன்கிழமை இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.      நாளை நிறைவடையும் என நம்பிக்கையுடன் இருந்த பதவி உயர்வு ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். இதை வைத்து மெகா சீரியல் வெளியிட்டால் நல்லா இலாபம் கிடைக்கும் என்பதே இப்போதைய பேச்சு. பொறுத்திருப்போம் புதன்கிழமை வரை.
இன்று ( 24.10.2013 ) இரட்டைப்பட்டம் விசாரணைக்கு வருகிறது .    சென்னை உயர்நீதி மன்றத்தில் இரட்டைப்பட்டம் மீண்டும் இன்று (24.10.2013 ) விசாரணைக்கு வருகிறது. பட்டதாரி இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு நீயரசர் தடை உத்தரவு வழங்கி உள்ளதால்எந்த பணியிடமும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.    TET RESULTவிரைவில் வெளியிடும் நிலையில் இரட்டைப்பட்டம் வழக்கு முடிந்தால் அல்லது தடை உத்தரவை நீக்கினால் மட்டுமே இடமாறுதல் மற்றும் புதிய பணியிடங்களுக்கு தடைநீங்கும் எனவே இன்று விசாரணைக்கு வரும் என்ற ஆவலோடு இருப்போம்...