மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், போனமுறை ( ஜனவரி ) சான்றிதழ் சரிபார்ப்பில் சான்றிதழ் இல்லாமல் அல்லது வேறுபிற காரணங்களால் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்களும் கலந்து கொள்ள இன்று கடைசியாக வாய்ப்பளிக்கபடுகிறது.
12 May 2014
அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைக் கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. பரசுராமன் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்: 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 2-வது சிறப்பு தேர்வின் மூலம் தேர்ச்சிபெற்ற 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 192 கணினி பயிற்றுநர்களையும் பணிவரன்முறை செய்திட வேண்டும்.
புதிதாக நியமனம் செய்யப்பட உள்ள கணினி பயிற்றுநர்களுக்கு முன்பாகவே இப்போது பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணி விதிகள் உருவாக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் புதிய கணினி பயிற்றுநர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...