27 May 2017

முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பாணை விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூலை 2 -இல், 1,663 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை மே 9 -ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்வதற்கு மே 30 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையில், ஒரு கை, கால் மற்றும் இரண்டு கால்கள் 40 முதல் 70 சதவீதம் வரை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைபாடு அளவை நிர்ணயித்தது, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றிய நிலையில், இதற்கு முரணாக 3 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது.
உடலில் 70 முதல் 100 சதவீதம் பாதித்தவர்கள் விண்ணப்பம் செய்ய தகுதியில்லை என்று கூறுவது, கடந்தாண்டு மார்ச் 2 -இல் மாற்றுத் திறனாளிகள் துறை வெளியிட்ட அரசாணைக்கு எதிரானது.
எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்வதோடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ஜூன் 23 முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு; மே 29 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 -ஆம் தேதி முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை பிளஸ்-2 துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மே 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 1 (வியாழக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் பிரௌசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ஐ சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தாற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும்.
சிறப்புத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 வரை நடைபெறும். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள தேர்வுக்கான கால அட்டவணை:
ஜூன் 23 ---- வெள்ளிக்கிழமை ---- மொழிப்பாடம் 1
ஜூன் 24 ---- சனிக்கிழமை -------- மொழிப்பாடம் 2
ஜூன் 27 ---- செவ்வாய்க்கிழமை -- ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 28 ---- புதன்கிழமை -------- ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 29 ---- வியாழக்கிழமை ----- வேதியியல்,
கணக்குப்பதிவியல்
ஜூன் 30 ---- வெள்ளிக்கிழமை ---- வணிகவியல், மனையியல்
ஜூலை 1 ---- சனிக்கிழமை ------- கணிதம், விலங்கியல்,
நுண்ணுயிரியல்,
ஊட்டச்சத்து-சமச்சீர் உணவியல்
ஜூலை 3 ---- திங்கள்கிழமை ----- தொடர்பியல் ஆங்கிலம்,
இந்திய கலாசாரம்,
கணினி அறிவியல்,
உயிரி வேதியியல்,
சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்)
ஜூலை 4 ---- செவ்வாய்க்கிழமை -- அனைத்து தொழிற்கல்வி பாடங்கள்,
அரசியல் அறிவியல், செவிலியர்
(பொது), புள்ளியியல்
ஜூலை 5 ---- புதன்கிழமை -------- உயிரியல், வரலாறு,
தாவரவியல், வணிக கணிதம்
ஜூலை 6 --- வியாழக்கிழமை -----இயற்பியல், பொருளியல்

    பள்ளிகள் திறப்பு ஜூன் 7-க்கு ஒத்திவைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்



    k-a-sengottaiyan
    கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்டுவது தொடர்பான இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி:
    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்துடன் விவாதிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    அதன்படி வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

      ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு: தேர்வு வாரியம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு புதிய பாடத்திட்டம் காரணமாக முதுகலை பட்டதார...