Posts

Showing posts from September 15, 2014
TET வழக்கு விசாரணை நாளை தொடரும்...  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார். வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டுவழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.. அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற்றது.எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் நாளை தொடங்க உள்ளது.
TET case:வழக்கு விசாரணைக்கு வந்தது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது. காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார். வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டு வழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார். .  அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
வெயிட்டேஜ்’ முறைக்கு எதிர்ப்பு: சென்னையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 210 பட்டதாரி ஆசிரியர்கள் கைது- தினதந்தி  ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே... இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகை