83 பேரின் குரூப்-1 தேர்வு ரத்து எதிர்த்து சீராய்வு மனு?: டெல்லி விரைந்தார் டிஎன்பிஎஸ்சி தலைவர்
தமிழகத்தை சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. காவல்துறை டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்கள், 2004-ல் பணியமர்த்தப்பட்டனர். தேர்வில் மோசடி நடந்ததாக, அதில் தோல்வியடைந்தவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, 91 பேரில், 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உயர்வு
இதைத் தொடர்ந்து, அந்த 83 அதிகாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு ரத்தானதால், பாதிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் டாஸ்மாக் பொது மேலாளர்கள், ஆளுநர் மாளிகை துணைச் செயலாளர், வீட்டு வசதி வாரிய செயலாளர் போன்ற பதவிகளை வகித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக இத்தீர்ப்பு வந்துள்ளது. இதனை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது
5 July 2014
அடுத்த TET எப்போது ?
நீதிமன்றம் நேற்று அதிரடியாக TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்ததால்TRB தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது. ஆகையால் மிக விரைவில் இந்தாண்டுக்கான(2014) ஆசிரியர் தகுதிதேர்வு நடத்த திட்டம் வகுத்துள்ளது. அக்டோபர் மாதம் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆசிரியர் தேர்வில்லாவது எந்த இடத்துக்கும் தாமதம் ஆகாத வகையில் நடக்கும் என்று எதிர்ப்பார்போம்.
Source www.tntam.in
டி.இ.டி., தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு-Dinamalar
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.
எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

உதவிப் பேராசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு - தினமணி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைநிலைக் கல்வி வாயிலாக எம்.பில். பட்டம் பெற்றவர்கள், பி.எட்., எம்.எட். கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2013-ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தியது. அதற்கான மதிப்பெண்களும் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், பி.எட். மற்றும் எம்.எட். கல்வியியல் கல்லூரி பணி அனுபவத்தை கணக்கில் கொள்ளவும், எம்.பில். பட்டத்தை 3-4-2009 தேதிக்கு முன்பாக தொலைநிலைக் கல்வி வாயிலாக பெற்றவர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்ளவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
அதன்படி, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை அவர்களுக்கு கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பாக திங்கள்கிழமையும் சான்றிதழ் சரிபார்ப்பில் அவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)
TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...