22 October 2023

 ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு




அரசாணயில்‌ வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌, ஆசிரியர்‌ நேரடி நியமனம்‌ தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்சவயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "04.10.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம்.


 அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.#திராவிட_மாடல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!



புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக விதிமுறைகளும் உருவாக்கப்பட்டது.


இந்தநிலையில் முதற்கட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார்.


144 ஆசிரியர் பணியிடம்


இந்தநிலையில் புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காரைக்கால் மற்றும் மாகியில் காலியாக உள்ள 144 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று  (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


அதன்படி காரைக்காலில் 124 இடங்களும் (வகுப்பு வாரியாக பொது-52, ஓ.பி.சி.-13, எம்.பி.சி.-22, இ.பி.சி.-2, பி.சி.எம்.-2, பி.டி.-1, எஸ்.சி.-19, எஸ்.டி.-1, இ.டபிள்யு.எஸ்.-12, பி.டபிள்யு.பி.டி.-4), மாகியில் 21 இடங்களும் (பொது-11, ஓ.பி.சி.-2, எம்.பி.சி.-3, எஸ்.சி.-3, இ.டபிள்யு.எஸ்.-2) நிரப்பப்பட உள்ளன.


வயது வரம்பில் தளர்வு


ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


இதற்கான வயது வரம்பு 18 முதல் 32 வயது இருக்கவேண்டும். இதில் ஓ.பி.சி., எம்.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., பி.டி. ஆகிய பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வகுப்புகள் வாரியாக 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் ஆகியோருக்கும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 


இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு 0413-2207320 என்ற எண்ணுக்கு அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம்.


இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார்.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...