TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் நாளை (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் நாளை (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் நாளை (02.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும் நாளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. 129 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது
கடந்த வாரத்திலிருந்து தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
1 July 2014
திட்டு வாங்கும் TRB
இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது.
இதில் தாள் 1 க்கான வழக்குகள்.3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டன.சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு இருந்தது.ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும் நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப் படவில்லை.தாள் 1 ஐ பொறுத்தவரை அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.
தாள் இரண்டை 4.15 வாக்கில் விசாரணைக்கு வந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப் படும் என்றே தெரிகிறது.குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது
ஆங்கில வினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும் நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடை பெறவில்லை.
நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் experts களையும் வார வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வாதங்களின் போது நீதிபதியிடமிருந்து TRB காரர்கள் வாங்கும் வசை இருக்கிறதே அய்யய்யோ.நாம் காதில் தேனாய் வந்து பாய்கிறது.அவர்கள் வசை வாங்குவதற்கு நம்முடைய சாபம்தான் காரணமோ?
Source Www.kalviseithi.com
TRB TET key answer சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TET வழக்குகளைப் பொறுத்தவரை வழக்கு தொடுத்தவர்களில் ஏற்கனவே 82 மதிப்பெண் பெற்று தகுதிப்பெற்றவர்களின் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாகவும் 82 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள் எழுப்பிய வினாக்களின் விடைகளை நீதியரசர் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிற வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனத் தெரிகின்றது.
குரூப் 1 தேர்வு வழக்கு: 83 பேர் நியமனம் ரத்து ஏன்?
தமிழகத்தில் குரூப் - 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 தேர்வு நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர்.
2001-ம் நடந்த தேர்வில் பங்கேற்றவர்களில் 91 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்தெடுக்கப்பட்டனர். அவர் களில் 24 பேர் துணை ஆட்சி யர்களாகவும், 20 பேர் டி.எஸ்.பி.க்களாகவும், 10 பேர் வணிக வரித் துறை அதிகாரிகளாகவும், 33 பேர் கூட்டுறவு துணைப் பதிவாளராகவும் பல பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த 91 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரிதேர்ச்சி பெறாதவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது ஏ.பி.நடராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டில் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. "இத்தேர்வு முறையில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ளதால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுதாரர்கள் கோரினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, 83 பேர் குரூப்– 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு, தமிழக அரசின் முக்கியப் பதவிகளில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அனித் தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோர், குரூப் – 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்று திங்கள்கிழமை தீர்ப்பளித்தனர்.
குரூப் 1 தேர்வு வழக்கு: 83 பேர் நியமனம் ரத்து ஏன்?83 பேர் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளாக தேர்வு செய்ததில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக நடராஜன் தனது மனுவில் கூறியிருந்தார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விதிமுறைகளுக்கு மாறாக விடைத்தாளில் ஸ்கெட்ச் பேனா மற்றும் பென்சில் பயன்படுத்தியது, இரண்டு வண்ண மைகளைப் பயன்படுத்தியது, சில வழிபாட்டுச் சின்னங்களை விடைத்தாளில் எழுதி வைத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் எஸ்.விசாகன், சி.சியாமளாதேவி, ஆர்.பாண்டியராஜன், கே.கிங்ஸ்லின், கே.பிரபாகர், டி.பத்மாவதி, எம்.ஜெயராமன் மற்றும் கே.வரதராஜன் ஆகிய 8 பேர் தவிர மற்ற 83 பேரின் பணி நியமனம் செல்லாது என்று கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
வெளிப்படைத் தன்மை வேண்டும்:
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான மணிகண்டன் வதன், டி.என்.பி.எஸ்.சி. பணி நியமனங்களில் நடைபெறும் பல குளறுபடிகளும், வெளிப் படைத்தன்மை இல்லாததும்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகாவது பணி நியமனங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மணிகண்டன்
கடலூரில் குரூப்–2 தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குரூப்–2 தேர்வு கடந்த 29–ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஏராளமானபேர் எழுதினார்கள். கடலூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தபோது திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையம் அருகே ஒரு துண்டு சீட்டு கிடந்ததை கண்டுபிடித்தார். அதில் குரூப்–2 தேர்வு வினாக்களுக்குரிய விடைகள் இருந்தன. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். தேர்வு முடிந்த சிறிது நேரத்தில் விடைகள் எழுதப்பட்ட தாள் கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வினாத்தாள் அவுட் ஆனதா? என்று அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் குரூப்–2 தேர்வு எழுதிய மாணவர்கள் 100 பேர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 'ரத்து செய், ரத்து செய் குரூப்–2 தேர்வை ரத்து செய்' என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:– கடந்த 29–ந் தேதி நடைபெற்ற குரூப்–2 தேர்வு வினாத்தாள் அவுட் ஆனதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். கடந்த 2012–ம் ஆண்டு இதேபோல் குரூப்–2 தேர்வு வினாக்களுக்குரிய விடைத்தாள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் கடந்த 29–ந் தேதி நடைபெற்ற குரூப்–2 தேர்வையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...