Posts

Showing posts from May 6, 2023
Image
  நாடு முழுவதும் நாளை மதியம் நடக்கிறது; நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விதிமுறைகள்: எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை எவை? தேசிய தேர்வு முகமை வௌியீடு நாடு முழுவதும் 18.72 லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வு நாளை நடக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மோதிரம், வளையல், காதணிகள், மூக்குத்தி, செயின், கண்ணாடிகள், தாயத்து, பெல்ட் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் 499 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை (7ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டது. இணையதளம் வாயிலாக
Image
  நூலகர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமன கணினிவழி தேர்வு மே 13-ம் தேதி (காலை மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது. இத்தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைஇத்தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. .
Image
  டி.என்.பி.எஸ்.சி- யை துண்டாடக் கூடாது: புதிய ஆள்தேர்வு வாரியம் தேவையில்லை...! - ராமதாஸ் அறிக்கை. தமிழ்நாட்டில் அரசு துறை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வாணையத்தை இரண்டாக பிரிக்கவும், புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அப்படி புதிய தேர்வு ஆணையம் அமைக்கத் தேவையில்லை எனவும், பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, "தமிழ்நாட்டில் அரசுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் . அதன்படி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், சீருடைப்பணியாளர்கள் போன்றவர்களை தேர்வு செய்ய துறை சார்ந்த தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வரும்போதிலும், பெரும்பாலான அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகவே தகுதியானவர்கள் தேர்வாகின்றனர்..  இவ்வாறிருக்க, இந்த அமைப்பானது சுமூகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சார்பு நிலை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய எஸ்.எஸ்.சி. போன்ற இன்னொரு தேர்வு வாரியத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அது குறித்து முடிவு எடு