Posts

Showing posts from August 1, 2023
Image
  தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Image
  10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனிதேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம். தனி தேர்வர்கள் ஆக.10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்டகல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.  80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்விஆண்டுக்கான 10-ம் வகுப்புபொதுத் தேர்வ
Image
  தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு! தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!! தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு என்ற அரசாணையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது என விளக்கமும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,' தமிழ், ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும் கல்வி பயின்றுள்ளேன். இதில் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப்-1 எழுத்து தேர்வு மார்ச்.4ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அதற்கு விண்ணப்பித்தும் உ
Image
  புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மக்கள் மீது வரிச்சுமையை திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.