Posts

Showing posts from May 26, 2022
Image
  கட்டாய கல்வி உரிமை சட்டம் - தனியார் பள்ளிகளில் சேர 1,42,175 பேர் விண்ணப்பம்! தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில், 8,238 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 94,256 இடங்கள் நிரப்பப்பட இருந்தன. இதற்காக இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி கூறுகையில், "தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு, இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர், தகுதியில்லாத விண்ணப்பதார் விவரம், நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகியவை பள்ளித் தகவல் பலகையிலும், rte.tnschools.gov.in என்ற இணையதளத்திலும் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படும். மேலும், பள்ளியில
Image
  நீட் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்ய அனுமதி!! ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில், இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 6 என தெரிவித்திருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்ட நிலையில், மீண்டும் மே 20-ந் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்தம் செய்துகொள்ள, விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் நாளை மறுநாள் ( மே 27) இரவு 9 மணி வரை திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். அதன்பிறகு, விண்ணப்பத்தில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது என்பதால், தேர்வர்கள் மிக
Image
  10-ம் வகுப்பு கணித வினாத்தாளில் தவறான கேள்விகள் இடம்பெறவில்லை - தேர்வுத் துறை அதிகாரிகள் விளக்கம் பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்விகள் எதுவும் இடம் பெறவில்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கணித பாடத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் ஒருசில வினாக்கள் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேட்கப்பட்டதாகவும், அந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதன்படி தேர்வுத் துறை நிபுணர் குழுவினர் வினாத்தாள் சர்ச்சை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''10-ம் வகுப்பு கணிதத் தேர்வில் தவறான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை என்பத