17 February 2024

 திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?அன்புமணி சந்தேகம்.





தமிழ்நாட்டில் திமுகவின் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டானிகுக்கு பா.ம.க.தலைவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 dmk government provided 60567 employment in 3-years, Anbumani ramadoss seeking white paper report…தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.



 சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும் போது முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.


சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப் பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டிருந்தார்.


 அதன்பிறகு அரசுப் பணிக்கு இன்னும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் பிற நடைமுறைகள் இன்னும் நிறைவடைய வில்லை. பிற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1598 பேருக்கு இப்போது தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், எங்கிருந்து 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன? என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.


முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 


ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.


திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 


அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, ஐந்தாண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 10% அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல் 60 லட்சம் பேர் என மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், அக்காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 


இன்னும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, ஒட்டுமொத்தமாக அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும். இதற்கும், திமுக அளித்த வாக்குறுதிக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது தமிழ்நாட்டில் படித்து விட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு ஒப்பானது ஆகும்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 


மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும்; தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.


இவ்வாறு கூறி உள்ளார்.

 புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை மூலம் வேலைவாய்ப்பு 




 ஒப்புதல் தந்த ஆளுநர்.. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேர் நியமனம்! யார் இவர்கள்? தமிழக அரசு உத்தரவு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.


இதையடுத்து 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்வுகள், நேர்க்காணல் நடத்தி இந்த தேர்வாணையம் அரசு பணிக்கு ஆட்களை சேர்த்து வருகிறது.


டிஎன்பிஎஸ்சியை பொறுத்தமட்டில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் நீண்டகாலமாக டிஎன்பிஎஸ்சிக்கு தலைவர் இல்லாத நிலை இருந்தது. மேலும் 14 உறுப்பினர்களுக்கு பதில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் டிஎன்பிஎஸ்சியின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.


அதாவது போட்டி தேர்வில் குளறுபடி, தேர்வு முடிவுகளில் காலதாமதம் செய்தல் உள்ளிட்டவை ஏற்பட இதுவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை முறைப்படி நிரப்ப வேண்டும் என அரசு பணிக்கான தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனை தமிழக அரசும் பரிசீலனை செய்தது.


டிஎன்பிஎஸ்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் செய்ய ஆளுநராக இருப்பவரின் ஒப்புதல் என்பது தேவையாக உள்ளது. இதனால் தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராகவும், மேலும் 8 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாகவும் நியமிக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.


ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி அந்த கோப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த பொறுப்புகளுக்கான விண்ணப்பம் குறித்து கேட்டும், வெளிப்படைத்தன்மை இல்லை என தெரிவித்தும் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்க மறுத்தார். இந்நிலையில் தான் தற்போது டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதாவது டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேரை நியமனம் செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அதுதொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 



அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், டாக்டர் தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் உள்ளிட்டோரும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நியமனம் இப்போது செய்யப்பட்டு இருந்தாலும் கூட இன்னும் டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் 5 உறுப்பினர் பொறுப்புகள் காலியாக உள்ளன. தற்போதைய சூழலில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பை உறுப்பினர் முனியநாதன் கூடுதலாக கவனித்து வருகிறார். 


இருப்பினும் கூட இப்போது 5 பேர் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் டிஎன்பிஎஸ்சி செயல்பாடு என்பது அதிகரிக்கும் என அரசு பணிக்கான போட்டி தேர்வர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 தேர்தல் நடத்தை விதிகளால்.. போட்டித்தேர்வு நடத்துவதில் தாமதமா? டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?


லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் எந்த விதத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பாதிக்கப்படாது என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால், புதிய திட்டங்களையோ, அறிவிப்புகளையோ வெளியிட வேண்டும் என்றால் அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விட்டு தான் அறிவிப்பினை வெளியிட முடியும்.



தேர்தல் அறிவிக்கை வெளியாகிவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், அரசின் செயல்பாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் என்பதும் அமலுக்கு வந்துவிடும். எனவே தற்போது அரசு வேலைக்காக தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள், லோக்சபா தேர்தலால் தேர்வுகள் தள்ளிப்போய்விடுமோ என அச்சமடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.


இப்படிப்பட்ட ஒரு சூழலில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. குரூப் - 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு அட்டவணை வெளியாகி இருக்கிறது. இதேபோல் பல நியமனங்களுக்கான பணிகளும் நடந்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், இது எந்த வகையிலாவது டிஎன்பிஎஸ்சி தேர்வை பாதிக்குமா? பணி நியமனங்களில் பாதிப்பு வருமா? தேர்வு நடத்துவதில் எதும் சிக்கல் வருமா? என்று பல்வேறு சந்தேகங்களை பட்டாதரிகள் டிஎன்பிஎஸ்சி அமைப்பிடம் கேட்டு வருகின்றனர்.


இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னாட்சி அங்கீகாரம் கொண்ட எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்று சொல்லக்கூடிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இதேபோன்று டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தன்னாட்சி அங்கீகாரம் கொண்ட அமைப்புகளுக்கு எந்தவித வகையிலும் இந்த தேர்தல் நடத்தை விதிகள் பாதிப்பை ஏற்படுத்தாது.


பணி நியமனங்களோ, தேர்வு தொடர்பான பணிகளோ, பதவி உயர்வு அளிப்பதோ போன்றவற்றில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதேபோல் தன்னாட்சி அந்தஸ்து அல்லாத பிற அமைப்புகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று தான் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 "ஜூன் மாதத்திற்குள் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்"



அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 50,000 இடங்களும் நிரப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.



சென்னை கலைவாணர் அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,508 இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.


பின்னர் பேசிய முதலமைச்சர், அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 50,000 இடங்கள் நிரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதில், இதில், ஜூன் மாதத்திற்குள் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.



அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க செய்வது தான், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பிரதான நோக்கம் என்று முதலமைச்சர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் கடந்த 30 நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு சேவை கிடைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா.? என்னென்ன ஆவணங்கள் தேவை.? முக்கிய அறிவிப்பு.!!




நீட் தேர்வானது மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் neet.ntaonline.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வருகிறார்கள்.


விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 9ஆம் தேதி. இதற்கு முன்னதாக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.


அதன்படி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களை மாணவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் தற்போதைய பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட்கார்டு அளவிலான புகைப்படங்களும், அதில் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதியும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...