Posts

Showing posts from January 18, 2014
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது.தற்போதைய சான்றிதல் சரிபார்ப்பு சென்னை உயர்நீதி மன்ற ரிட் மனுக்கள் மீது வழங்கப்படும் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..( The provisional list and the outcome of this certificate verification exercise is subject to final orders in various writ petitions on answer keys filed before the Hon’ble High Court of Madras. -TRB) இதற்கிடையில் முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ
'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனும்உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய கோரிக்கை 'ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர். ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில்நடக்கிறது. 'தாள்- 2 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும். இதனால்'செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது, டி.ஆர்.பி.,யின் உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள்
கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றி வந்த 1,800 கணினி ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதற்காக சிறப்பு தேர்வும் நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின், பணி நிரந்தரப்படுத்தப்பட்டது.தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட் டவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடந்த மறுதேர்விலும் சுமார் 480 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 20
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை-Dinathanthi ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதற்கான விடைகளும், பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது. ஆனால் விடைகள் சில கேள்விகளுக்கு சரி இல்லை என்று எதிர்ப்பு வந்ததால், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த 12–ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்த்தல் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 20–ந் தேதி சான்றிதழ் சரிபார்த்தலுக்கு செல்பவர்களுக்கு மட்டும் சிக்கல் எழுந்துள்ளதாக, சென்னையை சேர்ந்த சில தேர்வர்கள் கூறி உள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘‘தமிழ் வழியில் படித்துள்ளதால் நிறைய சான்றிதழ்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து உரிய அதிகாரிகளின் கையெழுத்து வாங்கவேண்டி உள்ளது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்கள் சென்னையில் உறவினர் வீடுகளில் தங்கி இருக்கிறோம். ஆனால் தேர்வு முடிவு வெளி