22 May 2022

 பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி




திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 2 நாள் தேசிய அளவிளான நெல் திருவிழா நேற்று துவங்கியது.


இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: கடந்த ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு செயல்பாடும் இல்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மை பாதுகாப்பு மண்டல குழு கூட்டம் நடந்தது.


அந்த கூட்டத்தில் விளைநிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி விளை நிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டு அதில், எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகிறது. 


பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமை படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் காய்கறிகள் விளைவிப்பது போன்ற விவசாய பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் 28ல் துவக்கம்




தினமலர்' நாளிதழ் மற் றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரியில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கின்றது.


சித்தன்குடி பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 10;00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெற உள்ளன. 


உயர்கல்விக்கான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் அங்கு பெறலாம்.என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித்திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.


உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை, வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும்.மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் எவை, உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைத்து துறைகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.


மேலும், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்படும்.அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., நிப்பர், எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ.,-ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, கட்டடக் கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம் உட்பட அனைத்து துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளின் 'ஸ்டால்'கள் இடம் பெறுகின்றன.


பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம்.இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணனா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், பிக் எப்.எம்., - 92.7, எஸ்.மீடியோ, அக்குவா கிரீன் இணைந்து வழங்குகின்றன. அப்பளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அள்ளி தரும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியை பங்கேற்கும் வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க........பரிசு மழைவழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளது.உடனே பதிவு செய்யுங்கள்'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.


உயர் கல்வி குறித்த உங்களின் சந்தேகங் களுக்கு நேரில் விடை காண www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505-74441 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் உடனே பதிவு செய்யுங்கள்.

 குரூப்-2 தேர்வர்களுக்கு.. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!!!!




தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2,2A தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில்தேர்வு எழுதினர்.


இந்நிலையில் தற்போது தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என்றும் இன்னும் 5நாட்களில் Tentative Answer Key வெளியிடப்படும் என்றும் தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன் பிறகு தான் வல்லுநர் குழு கூடி விடைகளை இறுதி செய்யும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


 School Reopen: 'சும்மா சும்மா லீவா? ஜூன் மாதமே பள்ளிகளை திறங்க' - காரணங்களை அடுக்கும் தனியார் பள்ளிகள் சங்கம் 



ஜூன் மாதமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.


விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.


இதுகுறித்துத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


''தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முடிந்து மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல உள்ளனர். மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில்தான் இருப்பார்கள்.


இதனால், அரசு அறிவித்தபடி ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களும், பள்ளிக்கு வந்து படிப்பை உறுதி செய்திட வேண்டும்.


ஏற்கனவே 800 நாட்கள் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்துவிட்டு, கற்றல் இழப்பை மாணவர்கள் சந்தித்தனர் மீண்டும் அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது. காலதாமதமின்றி அரசு அறிவித்த தேதியில் உடனடியாக அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட வேண்டும்.


சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கேட்பது வேதனையாக இருக்கிறது. 'ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி' என்பதை மறந்து விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே மாணவர்கள் அடிப்படைக் கல்வியை மறந்துவிட்டார்கள். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் இந்தக் கல்வியாண்டில் மகிழ்ச்சிகரமாக இந்த ஆண்டே, இந்த மாதமே தொடங்க வேண்டும்.


அதில் ஆசிரியர்களும் மாணவர்களும் சுணக்கம் காட்ட கூடாது. கல்விப் பணியில் செய்வதற்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கின்றன. பள்ளிகள் திறப்பைக் காலதாமதம் செய்யச் செய்ய, மாணவர்களை வீட்டில் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. அவர்கள் வேறு வழியில் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். படிக்கிற சூழல் இல்லாமல் போகும். மாணவர்கள் படிப்பதை மறப்பார்கள்.


ஏழ்மையான பெற்றோர்கள் கூலி வேலைக்குப் பிள்ளைகள் அனுப்புவார்கள். விடுமுறை தொடரும் சூழலில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமுதாய சீர்கேடுகள் அதிகரிக்க நேரிடலாம். இதனால் பெற்றோர்களின் மன உளைச்சலைக் குறைக்கவும் கற்றம் இழப்பைத் தவிர்க்கவும், உடனடியாகப் பள்ளிகளைத் திறந்து பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.


இதனால் ஜூன் மாதம் முதல் வாரமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும்ம் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், இன்ன பிறவற்றை வழங்க வேண்டும். அடிப்படை கல்வியை உறுதி செய்ய வேண்டும்.


விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, கற்றல் ஆர்வத்தைத் தூண்ட குறிப்பிட்ட கால அவகாசமும் அவசியம். இதனால் ஜூன் மாதமே உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும்''.


இவ்வாறு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

 TNPSC குரூப் 4 தேர்வு என்றால் என்ன?... "குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது".. முழு விவரம் இதோ...!!!!



டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?இது எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பது தொடர்பான முழு விவரங்களை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.


தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 12 லட்சத்து 58 ஆயிரத்து 616 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.


குரூப் 4 தேர்வு என்றால் என்ன? இது எந்த பதவிகளுக்கான நடத்தப்படுகிறது? என்பதை பற்றி உங்களுக்கு தெரியாது என்றால், இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசு பணிக்கு தேவையான நபர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அரசு பணியாளர் தேர்வாணையம் இந்திய அரசால் 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு உள்ளது. டிஎன்பிஎஸ்சி-யில் 4 தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளது. அவை குழு 1, குழு 2, குழு 3, குழு 4, இதை தவிர 5, 6, 7, 8, 9 தேர்வுகளும் நடத்தப் படுகிறது. இதில் பல நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது.


குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது :


ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).

பில் கலெக்டர்.

தட்டச்சு செய்பவர்.

ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).

கள ஆய்வாளர்

வரைவாளர்

குரூப்-4 தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள 6 அரசுத்துறை பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29- பிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது .ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடைபெறும். இந்தியாவில் இரண்டு வகையான பிஎஸ்சி தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்று யுபிஎஸ்சி அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய அரசு தேர்வு. மற்றொன்று பிஎஸ்சி அதாவது பொது சேவை ஆணையம் தேர்வு ஆகும்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...