Posts

Showing posts from June 5, 2023
Image
  12,000 காலிபணியிடம்.!தலைமை ஆசிரியரும் இல்லை, ஆசிரியர்களும் இல்லை! பள்ளியை திறந்து என்ன செய்ய.? சீறும் இபிஎஸ் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் 7.6.2023 அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்கவேண்டும் என்று அரசு
Image
  அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது.. ராமதாஸ் திடீர் எதிர்ப்புக்கு என்ன காரணம் தெரியுமா? அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் அமர்த்தல் கூடாது. நிலையான ஆசிரியர்களை உடனடியாக அமர்த்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை மறுநாள் திறக்கப்படவிருக்கும் நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 3,000 இடைக்கால ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக ஆணையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு 13,331 இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, அமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்ளும்படியும் வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் கூட, இடைக்கால ஆசிரியர்களைக் கொண்டே பள்ளிகளை நடத்த முனைவது கல்வி வளர்ச்சிக்கு வகை செய்யாது.   இடைக்கால ஆசிரியர்களை
Image
  வட்டார கல்வி அலுவலர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழக முழுவதும் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளன. அதன்படி, www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் ஜூலை 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் செப்.10ம் தேதி நடைபெறும் என்றும் இந்த எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தற்காலிகமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.