25 February 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைாத் தொடர்ந்து 2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது.)

மேற்கொண்டு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் - வலைதளமான www.trb.tn.nic.in - ல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (இதற்கு முன் நடைபெற்ற சான்றிதழ் சர்பார்பில் கலந்து கொள்ளாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.)
2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு.

2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.என சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நேற்றுவிசாரணைக்கு வந்தது. 

இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா வழக்கு குறித்து அரசின் நிலைப்பட்டை அறிந்து பதிலை தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அடுத்த வாரத்துக்கு வழக்கினை ஒத்திவைத்தார் எனதகவல் தெரிவிக்கின்றன.
டி.இ.டி., தேர்வுக்கு புதிய அரசாணை "பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல்,அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும்,சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,)எழுதலாம்'என,தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பார்வையற்றமாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும்,இலவச டி.இ.டி.,தேர்வு பயிற்சி அளிக்க,அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது,அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும்,தேர்வில் பங்கேற்க அனுமதித்தாலும்,குழப்பம் தீரவில்லை. அவர்களையும்,இலவச பயிற்சி வகுப்பில் சேர்த்துக்கொள்வதா,இல்லையா என்ற குழப்பம்,பயிற்சி இயக்குனரகத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

எனினும்,அவர்கள்,இலவச பயிற்சி பெற,முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்,பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என,இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.
"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு -- தின மணி 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 

இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது. 
பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. 

இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன

 முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20 வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...