Posts

Showing posts from February 4, 2024
Image
  தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: ஆசிரியர்களுக்கு பணி நியமனம், சம்பள உயர்வு, பழைய ஓய்வூதியம்.., வெளியாக இருக்கும் அறிவிப்புகள்?? தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் 2024 பிப்ரவரி 12ம் தேதி தொடங்க இருக்கிறது. குறிப்பாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று தமிழக பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில், ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தல், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், அரசு பணியில் அமர TET தேர்ச்சியை போதும் என்பதை உறுதி செய்து நியமன (போட்டித்) தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்டவைகள் தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Image
  பிப்ரவரி 12 ல் செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்
Image
  ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர இதர பணிகள் வழங்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அடல் டிங்கரிங் ஆய்வகம் (மத்திய அரசின் நிதியுதவி), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, பாடம் சார்ந்த இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள், மொழி ஆய்வகங்கள், தொழிற்கல்வி மற்றும் கணித ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. திறனை மேம்படுத்துதல்: இந்த ஆய்வகங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை படைக்கும் திறனைமேம்படுத்துவதற்கு உந்துதலாகஅமையும். இத்தகைய பள்ளிஆய்வகம் மற்றும் அதன் உபகரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும்அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாள
Image
  JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்; எப்படி விண்ணப்பிக்கலாம்? 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றோர், புகழ்பெற்ற ஐஐடி கல்லூரிகளில் சேர்ந்து லாம். ஆண்டுதோறும் இந்தத் தேர்வு 2 முறை நடத்தப்படும் நிலையில், 2ஆம் அமர்வுக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்
Image
  2222 பணியிடங்கள். தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு.!!! தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4ம் தேதி இன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு 2222 காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 13 மையங்களில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் இந்த தேர்வை 41,485 பேர் எழுத விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.  இந்த தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 36,400 – 1,15,700 வரை சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.