Posts

Showing posts from September 17, 2022
Image
  தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் இரண்டாக பிரிப்பு: புது பணியிடங்களை உருவாக்கி அரசாணை பிறப்பிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அதிகாரிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணை: அனைத்து வகையான பள்ளிகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் நிர்வகித்து வருவதால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செலவிடும் நேரம் குறைந்துள்ளது.  இதனால் மாவட்டக் கல்வி அதிகாரியால் திறம்பட பணிகளைச் செய்ய முடியவில்லை. தொடக்கக் கல்விக்கான பிரத்யேக மாவட்ட அளவிலான அலுவலர் இல்லாததால் கற்பித்தல் கற்றல் செயல்முறையை ற கண்காணிக்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளில். மாணவர்களைத் தக்க வைக்க ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் தொடக்கத்துறைக்கான மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) மூலம் ஒரு பிரத்யேகமான கண்காணிப்பு அமைப்பை வைத்திருப்பது அவசியம். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் அலுவலர் (தொடக்கப்பள்ளி), 58 மாவட்ட கல்வி அலுவ