Posts

Showing posts from July 15, 2022
Image
குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட TNPSC டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற Group I முதன்மைத் தேர்வு முடிவுகள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்றைக்கு அவர்களுக்கு நேர்காணல்கள் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் பட்டியல் மற்றும் நேர்காணல் குறித்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Image
  அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ரத்து செய்யகோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஆணை..!! மதுரை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ரத்து செய்யகோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீதம் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் தனது பெயர் இடம்பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.
Image
  மாணவர்களுக்கு 15 கட்டளைகள்....! விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை பிறந்த நாள் என்றாலும், மாணவ, மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கட்டளைகளை, வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில், மாணவ/மாணவியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிக்கையை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். 15 கட்டளைகள் என்னென்ன....! பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும். மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும். தலையில் எண்ணெய் வைத்து தலை வார வேண்டும். கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலை முடியை சரியான முறையில் வெட்ட பட்டிருக்க வேண்டும். காலில் காலணி அணிய வேண்டும். மாணவர்கள் 'டக் இன்' செய்யும் போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்