குரூப் 4-ல் தேர்ச்சி பெற்றவவர்களுக்கு மார்ச் 24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
குரூப் 4-ல் தேர்ச்சி பெற்றவவர்களுக்கு மார்ச் 24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறையினை தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு மறுநாள் நடைபெறுகிறது.அதற்கான
அழைப்பு கடிதம் தகுதி உள்ள தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
16 March 2014
மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி ,
ஜூன் 8-ல் முதல்நிலைத் தேர்வு
நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக11காலியிடங்களுக்கு22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு,ஜூன்8-ம் தேதி நடக்கிறது. மெயின் தேர்வு,நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில்11பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில்11மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,இயற்பியல்,வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில்9காலியிடங்களும்,அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு2காலியிடங்களும் உள்ளன.டி.என்.பி.எஸ்.சி. தகவல்ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி கடந்த12-ம் தேதியுடன் முடிவடைந்தது. டி.இ.ஓ. தேர்வுக்கு சுமார்22ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.11காலியிடங்களுக்கு22ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள்.முதல்நிலைத் தேர்வுடி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு,மெயின் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூன்8-ம் தேதி நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு550பேர் தேர்வு செய்யப் படுவர்.மெயின் தேர்வில்2பொதுஅறிவு தாள்களும் (தலா300மதிப்பெண்) கொள்குறி வகையிலான கல்வியியல் தாளும் (300மதிப்பெண்) இடம் பெறும். இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு,நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில்11பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.
Subscribe to:
Posts (Atom)
டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...