Posts

Showing posts from August 11, 2014
புதியதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் "Teacher Recruitment News" சார்பாக வாழ்த்துக்கள்!!!
முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இறுதி முடிவு வெளியீடு - தினகரன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றின் இறுதி முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.  அரசு மேனிலைப் பள்ளிகளில் 2012&2013ம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர் கிரேடு&1 ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. கடந்த அக்டோபர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  அதற்கான கீ&ஆன்சர் மீதுதொடரப்பட்ட வழக்கின் காரணமாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் பின்னர் வெளியிடப்பட்டு கடந்த ஜனவரி 17ம் தேதி சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட முதுநிலை பட்டதாரி தேர்வில் ஆங்கிலம்(347), கணக்கு(288), வேதியியல்(220), தாவரவியல்(192), வரலாறு(173), நுண்ணுயிரியல்(31) பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.  இந்த பட்டியலில்
முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை --- தின மலர்  முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது. இந்த உத்தரவின் படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட
10,500 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு -- தின தந்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி தேர்வு இந்தியாவில் அரசு பணியில் மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3–வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5–ந்தேதி வெளியிடப்பட்டது.  இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்ச்சி சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தை