Posts

Showing posts from February 1, 2017
TNTET-இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றக்கூடிய சமூக நீதிக்கு எதிரான வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் -சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆசிரியர்   தகுதி   தேர்வில்   இட   ஒதுக்கீட்டுப்   பிரிவினருக்கு   மதிப்பெண் தரவு   வழங்குதல் ,  இடைநிலை   மற்றும்   பட்டதாரி   ஆசிரியர் நியமனத்தில்   பின்பற்றக்கூடிய   சமூக   நீதிக்கு   எதிரான   வெயிட்டேஜ் முறையை   கைவிடுதல் ,  தகுதி   தேர்வில்   தேர்ச்சி   பெற்ற   அனைவருக்கும் பணி   வாய்ப்பு   போன்றவற்றை   அக்கறையோடு   கவனிக்கவில்லை என்று  ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏப்., 29, 30ல் 'TET' தேர்வு தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சட்டசபையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ''ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,'' என்றார். அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ''தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், 'டெட்' தேர்வு நடத்தப்படும்,'' என்றார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்று உள்ளனர். அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம் கடிதம் அனுப்பினார். இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும். ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்து வேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.