11 February 2014

TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (11.02.14ல்)விசாரணை 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.. 

இன்று ஆசிரியர் தேர்வுவாரியத்தின் சார்பில் வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பையா வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரம் திங்கள் அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தார். அன்று மனுதாரர்கள் சார்பில் தாங்கள் தெரிவித்த வினாக்களுக்கு உரிய ஆதாரத்தினை தாக்கல் செய்வதுடன் வாதம் நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேற்று (10.02.14) நேரில்முறையீடு.

முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தனர். 

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும் இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும் எனகோரிக்கை வைத்தனர். 

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் அவ்வழக்குகளின் முடிவுக்கு பின்னரே இறுதிப்பட்டியல் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் இறுதிப்பட்டியல் வெளியிடுவது தாமதமாகக்கூடும் எனத் தெரிகின்றது.
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி நியமனத்துக்காக காத்திருக்கும் பலர் விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேற்று (10.02.14) நேரில் முறையீடு விரிவான செய்தி விரைவில்... 
Thanks to www.thamaraithamil.blogspot.com
தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட் சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு. 

தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட் சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு. 

தொடக்கக்கல்விதுறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடத்தின் விவரத்தை(பாடவாரியாக) அனுப்ப அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறபித்துள்ளார்.
டி.இ.டி.,தேர்வு பட்டியல்:உச்சக்கட்ட குழப்பத்தில் டி.ஆர்.பி., தேர்வெழுதியவர்கள் புலம்பல்

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) விவகாரத்தில், உச்சக்கட்ட குழப்பம் நிலவுவதால், டி.ஆர்.பி., தவியாய்தவித்து வருகிறது. தேர்வுப் பட்டியல், கனவாகப் போய்விடுமோ என, தேர்வர்கள் புலம்பி வருகின்றனர்.

 டி.இ.டி., தேர்வில், ஆரம்பத்தில் இருந்தே, இடியாப்ப சிக்கல் நீடித்து வருகிறது. 2012ல் நடந்த தேர்வுக்கு, கேள்வித்தாளை கடினமாக்கியதுடன், தேர்வு நேரமாக, ஒன்றரை மணி நேரமே ஒதுக்கினர். இதன் விளைவு, தேர்வெழுதிய, 7 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். இதனால், அதே ஆண்டு இறுதியில், மீண்டும் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், கேள்வித்தாளை, சற்று எளிதாக்கியது உடன், தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக உயர்த்தினர். இதனால், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். 

27 ஆயிரம் பேர் தேர்ச்சி 
கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தி முடித்து, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரானது. இந்நிலையில், திடீரென, தேர்ச்சிக்கான மதிப்பெண் அளவை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு , 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்த‌து, கடந்த, 3ம் தேதி, முதல்வர் அறிவித்தார். ‘இந்த சலுகை, 2013 தேர்வுக்கும் பொருந்தும்’என,முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, தற்போது, டி.ஆர்.பி.,யை, இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. 

இதனால், 55 சத வீத மதிப்பெண் எடுத்தவர்களின் பட்டியைல தயாரித்து, அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டும். இதில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ள தாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த விவரத்தை தெரிவிக்க, டி.ஆர்.பி., விரும்பவில்லை. எனினும்,கூடுதல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இப்போது, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த முடியாத சிக்கல் உள்ளது. 

சான் றிதழ் சரிபார்ப்பு பணியில், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தான் ஈடுபடுகின்றனர். மும்முரமாக தற்போது,பிளஸ்2 செய்முறை தேர்வு துவங் கிவிட்டதால், அந்த பணியில், கல்வி அலுவலர்கள், மும்முரமாக உள்ளனர். இந்த மாத இறுதியுடன் , செய்முறை தேர்வு முடிகிறது . அடுத்த சில தினங்களில், மார்ச், 3ல் இருந்து, பொதுதேர்வு துவங்கி விடுகிறது. இதனால், அந்த தேர்வுப் பணி களில், அதிகாரிகள், கவனம் செலுத்துவர். தேர்வு முடிந்ததும், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கும். இப்படி, தொடர்ச்சியாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பணிகள் காத்திருக்கின்றன. 

இந்நிலையில், டி.இ.டி., தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, எப்படி நடத்த முடியும் என, கல்வித் துறை வட்டாரம், கேள்வி எழுப்புகிறது. இதற்கிடையே, ‘2012 தேர்வர்களுக்கும்,சலுகை அளிக்க வேண்டும்’ என, சிலர், சென்னை, உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். ‘இதுவைர நடந்த, மூன்று தேர்வுகளில், ஒரு தேர்வுக்கு மட்டும் சலுகை அளிப்பது, எந்த வைகயில் நியாயம்; குறிப்பாக, முதலில் நடந்த கடுமையான தேர்வை சந்தித்த தேர்வர்களுக்கு, சலுகை அளிக்க மறுப்பது சரியல்ல’என, தேர்வர்கள் குரல் எழுப்புகின்றனர். 

உச்சக்கட்ட குழப்பங்கள் 
இந்த விவகாரத்தில், 2012ல் நடந்த இரு தேர்வுகளில் பங்கேற்றவர்களுக்கு சாதகமாக, தீர்ப்பு கிடைக்கும் என, தேர்வர்கள் நம்புகின்றனர். இதன்படி, உத்தரவு வந்தால், தற்போதுள்ள இடியாப்ப சிக்கல், மேலும் சிக்கலாகும். இந்த உச்சக்கட்ட குழப்பங்களால், அடுத்து என்ன செய்வது என, புரியாமல், டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. அதிக மதிப்பெண் பெற்று,விரைவில், வேலை கிடைக்கும் என, காத்திருக்கும் தேர்வர்கள், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் குழப்பங்களால், புலம்பி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்

 "தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. 

இந்நிலையில், 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான கட்ஆப் தளர்வு 55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம் 57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர். 

அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2013--14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில் பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013--14 ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும். 

இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கி உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறை என, கல்வித் துறையினர் கூறுகின்றனர். சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும் 2014 ஜூனை தாண்டும்,” என்றார்.
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர்.ஆர். சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது TET I / TET II வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு ...