3 September 2014

போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல் 

தகுதி காண் மதிப்பெண் முறைக்கு எதிராக போராடி வரும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி என தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். 

பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் தமிழக அரசோ இதை கண்டும், காணாமல் இருந்து கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கும், தனக்கும் துளிகூட சம்பந்தம் இல்லாதது போலவும், அருகில் உள்ள மாநிலத்தில் இப்பிரச்சனை நடப்பதுபோலவும் தமிழக அரசு நடந்து கொள்கிறது. 

தற்போது போராட்டம் நடத்திவரும் அனைவருமே சுமார் 30லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். 

ஆனால் தமிழகஅரசு தகுதிகாண் மதிப்பெண்அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த தகுதிகாண் மதிப்பெண்ணை பெறமுடியாது. 

தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்ஆகியோருக்கு மட்டுமே இந்த தகுதிகாண் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும். எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில்பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையில்பணி நியமனம் செய்ய வேண்டும். 

தகுதிகாண் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். 

சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை போற்றும் விதமாக நாளை மறுதினம் (05.09.2014)ஆசிரியர்கள் உண்மையான மகிழ்ச்சியுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்து பேசி இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை-Dinamalar News

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரைஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
Flash News:TNTET-PAPER I&II:பணிநியமனத்திற்கு தடை-மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

TET Posting: Stary Order Issued For Paper1 & Paper2 Appointment - பணி நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெட் வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை நீதிமன்றம் இன்று உத்தரவு. 

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவதற்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி, நடத்த அனுமதி உண்டு. ஆனால் உரியபணி இடத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது - தினகரன் மெரினா காந்தி சிலை அருகே கோரிக்கை முழக்கமிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், 4 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். எனினும் அரசிடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினா காந்தி சிலை முன்பு நேற்று காலை கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கமிட்டனர். தகவல் அறிந்து மெரினா போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...