21 March 2017

அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்


தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

மேலும் அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இதற்காக 13,000 யோகா ஆசிரியர்கள்நியமிக்கப்பட உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'TET' தேர்விலிருந்து விலக்கு?

டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது.

 இது குறித்து, மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது: அரசு பள்ளிகளில், 2011 டிசம்பரில், 3,200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 
இவர்களில், 300 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், கலப்பு திருமணம் செய்தோர் என்ற, சிறப்பு பிரிவுகளில் தேர்வாகினர்.

 இந்த ஆசிரியர்களும், 'டெட்' தேர்வு எழுத வேண்டும்என,
 பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அவர்களுக்கு, தேர்வில் 
இருந்து விலக்களிக்க வேண்டும். 2004ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறை பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம் பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என, கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது. பொதுவாக கணித தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என, மாணவர்கள் விரும்புவர். ஆனால், நேற்றைய வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்களின் சென்டம் லட்சியம் நிறைவேறுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.
இரு மதிப்பெண் வினா, 36வதுவினா, கட்டாய வினா, கிரியேட்டிவ் வகை வினா கடுமையாக குழப்பியது. இந்த வினாவை, புத்தகத்தில் பார்த்ததே இல்லை என, மாணவர்கள் கூறினர்
ஐந்து மதிப்பெண்ணுக்கான, 45வது வினாவில், 'பி' பிரிவு வினா கடினமாக இருந்தது. ஆனாலும், சாய்ஸ் என்ற விருப்ப வினாவில், கடின வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காமல் விட்டு விட்டனர். இதனால், சென்டம் குறையலாம் என, ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.


  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...