17 December 2012

பணிப்பதிவேடு (SR) தட்டுப்பாடு - ஆசிரியர்கள் எதிர்கொள்ள போகும் சவால். 17- டிசம்பர் - 2012 அன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ளகல்வித்துறை அலுவலகங்களில் ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியமர்த்தல் பணிகள் நடைபெற உள்ளன. இதில் முக்கிய செயலான பணிப்பதிவேடு துவங்குதல் பணி நாளை நடைபெற உள்ளது. திடீரென 1000 க்கும் மேலான பணி பதிவேடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதால் பணி பதிவேடுகள் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது. இதனை பயன்படுத்தி அதிக விலைக்கு பணி பதிவேடுகளை விற்கவும் வாய்ப்புகள் உள்ளன. Today 1. மருத்துவரிடம் பெறப்பட்ட உடற்தகுதிச் சான்று 2. அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் 3. கொடுக்கப்பட்ட பணியாணை 4. பணிப்பதிவேடு (SR Register ) ஆகியவற்றை தவறாமல் உடன் எடுத்துச் செல்லுமாறு ஆசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...