Posts

Showing posts from October 8, 2016
ஆன்லைனில் ஆர்.டி.ஐ., தகவல் வெளியிட மத்திய அரசு உத்தரவு  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம்: ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அரசுத் துறை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் பதிவேற்றம்: அதில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனினும், ஆர்.டி.ஐ., மூ
பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில் ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மாற்றம் கொண்டு வர, கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.கடந்த கல்வி ஆண்டு வரை, பி.எட்., படிப்பு, ஓராண்டாக இருந்தது. 2014ல் அமலான புதிய விதிமுறைகள்படி, இரு ஆண்டாக மாற்றப்பட்டது.  அதன்படி, தமிழகத்திலுள்ள, 690 கல்லுாரிகளும், பி.எட்., படிப்பை நடத்துகின்றன.  இந்த கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற வேண்டும்; பின், தமிழகத்தில் உள்ள, ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். இந்த நடைமுறையிலும், பாடத்திட்டம் வரையறை செய்வதிலும் பிரச்னைகள் உள்ளதாக, மத்திய அரசுக்கு, கல்வியாளர்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன.  இதை தொடர்ந்து, பி.எட்., விதிகளில், மீண்டும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துக்களை, அக்., 30க்குள் அனுப்ப வேண்டும் என, டில்லி ஆசிரியர் கல்வி கவுன்சில