Posts

Showing posts from January 5, 2016
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு. பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. அதேபோல் மார்ச் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வுகள் விவரம் : தமிழ் தாள்1 - 15/03/16 தமிழ் தாள் 2 - 16/03/16 ஆங்கிலம் தாள் 1 - 22/03/16 ஆங்கிலம் தாள் 2 - 29/03/16 கணிதம் - 4/04/16 அறிவியல் - 7/04/16 சமூக அறிவியல் - 11/04/16 13.04.2016 WED OPTIONAL SUBJECT பிளஸ் டூ தேர்வுகள் விவரம்: மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1 மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2 மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1 மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2 மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல் மார்ச் 18-ம் தேதி கணக்கு, உயிரியல், சத்துணவு மார்ச் 17-ம் தேதி வணிகம், வீட்டுப்ப
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர் பணி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 37 பணி: பேராசிரியர், இணை பேராசிரியர் உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி  பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும்,  இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர். விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வ
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது. இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.