Posts

Showing posts from November 17, 2022
Image
  67 லட்சம் பேர் தமிழக அரசு வேலைக்கான காத்திருப்பு பட்டியலில்... வெளியான முழு விவரம்.... தமிழகத்தில் 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக அரசு அறிவித்துளளது. தமிழகம் முழுவதும் 67 லட்சத்து 23 ஆயிரத்து 682பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அக்-31,2022 வரையிலான தரவின்படி தமிழகத்தில் மொத்தம் 67,23,682 பேர் அரசு வேலைக்கு பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இதில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 268 பேர் என அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மேலும் 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் 18 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேர், 18-30 வயதிற்குள் உள்ளவர்கள் 28 லட்சத்து 9 ஆயிரத்து 415 பேர், 30-45 வயதிற்குள் உள்ளவர்கள் 18 லட்சத்து 30 ஆயிரத்து 76 பேர், 45-60 வயதிற்குள் உள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 310 பேர், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,602 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் 1லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர
Image
  TNPSC தேர்வு முடிவுகளில் வெளிப்படைத் தன்மை.! தமிழக அரசுக்கு கோரிக்கை.! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கை எண்.486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொகுதி 2 மற்றும் 2A பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் பேர் பங்கேற்றனர்.   இந்த முதல் நிலைத் தேர்வு எழுதிய பத்து இலட்சம் பேரில், ஒரு பதவிக்கு பத்து பேர் வீதம் 5,529 பதவிகளுக்கு, ம