Posts

Showing posts from August 6, 2023
Image
  மாதம்தோறும் தேர்வு பள்ளிக்கல்வி புது திட்டம் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளும், தினசரி தேர்வுகளும் நடத்தி, மாணவர்களை பொது தேர்வுகளுக்கு தயார்படுத்துகின்றன.  அதனால், தனியார் பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.இதன்படி, அரசு பள்ளி மாணவர்களையும் அதிக மதிப்பெண் பெற வைக்கும் வகையில், மாதம் தோறும் தேர்வு நடத்தி, அவர்களை தயார்படுத்துமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.  ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டிய தேர்வு மற்றும் பாடத்திட்ட விபரங்களையும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இதன் மூலம், அடுத்த ஆண்டு பொது தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு ஏற்படும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
Image
  ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யாதீர்கள்!. மாணவர்களுக்கு வேண்டுகோள்! மாணவர்கள் தங்களது ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட் கடந்த ஜூலை 31ம் தேதிமுதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஒரிஜினல் மார்க் சீட்டை பாதுகாப்பு காரணங்களுக்காக பலரும் அதனை லேமினேஷன் செய்கின்றனர். இதுபோன்ற செயலை இனிமேல் செய்ய கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஏனென்றால், பிற்காலத்தில் அரசு பணி அல்லது உயர் கல்விகளில் சேரும் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் அரசு முத்திரை பதிக்கப்படும் என்பதால் மதிப்பெண் சான்றிதழை லேமினேஷன் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.