7 February 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில்PG/TET I / TET II-வழக்குகள் : நீதியரசர் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது.எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி (06.02.14) வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தது.இதைத்தவிர முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து வழக்குகளும் இதர படங்களில் வழக்குகளும் இன்று விசாரணைக்கு வந்தன. 

TET வழக்குகள் பலவற்றுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்திருந்து. வழக்குகளை நீதியரசர் ஆர் சுப்பையா அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.வழக்கில் மனுதாரர்களின் வாதம் அடுத்தவாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82-Dinamani News

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம். 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 சதவீதம்) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிளித்த முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.இந்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றுவதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும். இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் 82 எனவும் நிர்ணயிக்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்: இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.எனவே, 82.5 என்ற மதிப்பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்.

 "ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என, 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதல்வர் அலுவலகத்தில்,மனு கொடுத்து உள்ளனர். 

மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: மதிப்பெண் சலுகை குறித்த முதல்வர் அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள், 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
82 மதிப்பெண் பெற்றால் "பாஸ்' : டி.இ.டி., அரசாணை வெளியீடு

சென்னை: "ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்றிரவு வெளியிட்ட அரசாணை: முதல்வர் அறிவிப்பின்படி, டி.இ.டி., தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகிய இரண்டிலும், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, 55 சதவீத மதிப்பெண்ணான 82.5ஐ, 82 மதிப்பெண்ணாக முழுமையாக்கி, அரசு உத்தரவிடுகிறது. கடந்த 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வுகளுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை பொருந்தும். மேலும், வரும் காலங்களில் நடக்கும் அனைத்து டி.இ.டி., தேர்வுகளிலும், பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, 150க்கு, 90 மதிப்பெண்களும் (60 சதவீதம்), மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 82 மதிப்பெண்களும் (55 சதவீதம்) பெற வேண்டும் என, நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார். 

இதற்கிடையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என, 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர். மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: மதிப்பெண் சலுகை குறித்த முதல்வர் அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள், 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம். எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.
தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள்

மாநிலம் முழுவதும் வரும் கல்வியாண்டில் புதிதாக துவங்கவேண்டிய ஆரம்பப்பள்ளிகள்,நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவேண்டிய பள்ளிகளின் விபரங்களை உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர்அலுவலகத்துக்கு அனுப்ப மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும்,அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் புதிய பள்ளிகள் துவக்கப்படுவதுடன்,ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும். வரும் கல்வியாண்டில்,தரம் உயர்த்தவேண்டிய பள்ளிகள் சார்ந்த தகவல் சேகரிப்பு பணிகள் மாநிலம் முழுவதும் துவங்கியுள்ளது.பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை, இடவசதி, வகுப்பறைகள் எண்ணிக்கை,மைதான வசதி,ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து தகுதியான பள்ளிகள் பட்டியல் தேர்வு செய்யப்படவுள்ளது. 

கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''தரம் உயர்த்தப்பபடவேண்டிய பள்ளி களாக பள்ளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும்,புதிதாக துவங்கவேண்டிய தொடக்க பள்ளிகள் சார்ந்த பணிகள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில்,இதுசார்ந்த பட்டியல் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,''என்றா

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...