Posts

Showing posts from April 28, 2015
1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 18–ல் இருந்து அதிகபட்சமாக ஒவ்வொரு இனத்தவரை பொறுத்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.அந்தந்த மாவட்டங்களில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.கடந்த 24–ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோக்கப்படுகிறது. மே 6–ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் சேவை மையங்களில் விண்ணப்பம்வழங்கப்படுகிறது.அரசு வேலை, நிலையான சம்பளம் என்பதால் இந்த பணிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மையங்களில் கூட்டம் அலை மோது
ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர். கட்டுப்பாடு: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவை, ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த காலியிடங்களில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வு முடிவை வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. ஏப்., 16ல் இடைக்காலத் தடை நீக்கப்பட்டு, 70 சதவீத ஆசிரியர்களை, அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முற்றுகை: ஆனால், இதுகுறித்து, டி.ஆர்.