Posts

Showing posts from June 18, 2014
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை 20.06.14 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு  முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (17.06 14)சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் 20.06.14 வெள்ளிக்கிழமை ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் வழக்கினை அன்றையதினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு அன்று தெரியவரும்
குழப்பங்கள்!!!!  தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.  குழப்பம் 1  இந்த வாரத்தின் இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் அல்லது தேர்வு பட்டியல் வெளியாகவிருக்கிறது.இது கிட்டதட்ட உறுதிபடுத்தப் பட்ட செய்திதான். இது வரவேற்க வேண்டிய செய்திதானே என்று நினைக்கலாம். ஆனால் பள்ளிக்கல்வி துறையிடமிருந்து TRB க்கு இதுவரை காலி பணியிடம் குறித்த தகவல் சென்று சேரவில்லை.அதோடு பள்ளிகல்வித் துறைக்கான surplus இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது.surplus முடிந்த பின்புதான் காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும்.எனவே வெளியாகும் பட்டியல் தரவரிசை பட்டியலாக இருந்தால் நிம்மதி பிறக்கும். குழப்பம் 2  இந்த ஜூன் மாதத்தோடு தொகுப்பூதிய ஆசியர்களுடனான ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆனால் அடுத்த 3 மாதங்களும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தெரிகிறது.இறுதிப் பட்டியல் வெளியாகும் வேளையில் அவர்களை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க செய்வதின் மர்மம் என்னவோ? குழப்பம் 3  PG, BT ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாகத்தான் நிறைய குழப்பங்கள