Posts

Showing posts from January 28, 2023
Image
  குரூப்-3ஏ தேர்வு. வெறும் 15 காலிப் பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி.. TNPSC வெளியிட்ட தகவல்..!!!! ஓருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப்-3ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, பண்டக காப்பாளர், நிலை - II, தொழில் மற்றும் வர்த்தகத்துறை போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இத்தேர்வை சுமார் 1 லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில் 45,223 ஆண்களும், 53,582 பெண்களும் மற்றும் 3ஆம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 98,807 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக இருப்பினும் மிக அதிக அளவில் தேர்வர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டுள்ளனர். அதாவது, 15 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் பேர் வரை போட்டி போட்டு இந்த தேர்வை எழுதி உள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 3500-க்கும் அதிகமானோர் போட்டி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு பிப். 3ம் தேதி தொடக்கம்; ஹால் டிக்கெட் வெளியீடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான கணினி வழித் தேர்வு பிப்ரவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரும், விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புகைப்படம் ஒட்டாமலும், கையொப்பம் போடாமல் இருப்பது போன்றவற்றிக்கு 21 தேர்வர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.01.2023 முதல் 12.022023 வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என 03.012023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது.   தற்போது 03.02.2023 முதல் 14.02.2023 வரையிலும் நடைபெற உள்ள கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை (Schedule) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. தற்போது, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு1 (District . Admit Card.1) இன்று 27.01.2023 முதலும் தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்
Image
  மத்திய பணியாளர் தேர்வாணையம் காலிப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் விழுப்புரம் : மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு;மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி கடைசி தேதியாகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 1.1.2023 அன்றைய நிலையில் எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதிற்குள்ளும், பொது பிரிவினர் 25 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.  தேர்வுக் கட்டணம் 100 ரூபாய். இதில், பெண்கள், எஸ்.சி.,-எஸ்.டி., வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப