Posts

Showing posts from April 27, 2024
Image
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.  அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும், ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தவிட்டுள்ளது.  இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில
Image
 ' டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது? - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ( என்சிடிஇ ) விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 2024-ம் ஆண்டு 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்டவணையில் அறிவித்திருந்தது.  இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இதனால், 'டெட்' தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சிய