வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்படுமா?
வி.ஏ.ஓ., தேர்விற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி நெருங்கியுள்ள நிலையில், மழையால் சான்றிதழ்களை இழந்ததாலும், இணையதள சேவை பாதிக்கப் பட்டதாலும், விண்ணப்பிக்க முடியாமல் பலர் பரிதவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், கடந்த நவ., 12ம் தேதி வி.ஏ.ஓ., பணிக்கான எழுத்து தேர்விற்கு, அறிவிப்பு வெளியானது. எழுத்து தேர்வு, 2016, பிப்., 14ம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பிக்க, நாளை (14ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒன்றரை மாதங்களாக பெய்த கனமழையால், பலர் தங்கள் கல்விச் சான்றுகளை இழந்துள்ளனர். மழை பாதித்த மாவட்டங்களில் மொபைல்போன், இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பலர் வி.ஏ.ஓ., தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.எனவே, வி.ஏ.ஓ., பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீடிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.