தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு
தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளியில் ஆய்வாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம். மாதம் 9,300 - 4,800 + தர ஊதியம் ரூ.4800.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. (தேர்வுக்கட்டணம் ரூ.100 + விண்ணப்பக்கட்டணம் ரூ.50) இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014
மேலும் எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்றமுழுமையான விவரங்கள் www.tnpsc.gov.in பார்க்கவும்
26 June 2014
TET CASE FOR AGAINST NEW GO
மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது. உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.
TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கானதேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10 மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித்தேர்வு நடைபெறும். UG TRB தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம். இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்பட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட WEIGHATE யையும் கணக்கில் கொண்டு FINAL SELECTION LIST முடிவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். CTET / KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு பின்பற்றும் முறையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என TRB யில் உயர் பதவியில் உள்ள கல்விக்குரலின் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்
source www.tntam.in
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (26.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் நேற்று விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று ( 26.06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...