Posts

Showing posts from August 20, 2016
தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை அரசு பள்ளிகளில் பணியாற்றும், அனைத்து வகை ஆசிரியர்களும், உயர் கல்வியில் வேறு பாடங்கள் படித்தாலும், அவர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், இதேபோன்ற ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், திருவாரூரில் நடந்தது. இதுகுறித்து, மாநில அமைப்பாளர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறியதாவது: உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கிடைக்காமல், 3,000க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு இல்லாத பணி இடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; இதில், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம், 5,400 ரூபாய் என, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில்