Posts

Showing posts from August 31, 2014
இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு. இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும்,இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர். வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 1010 102103101 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே உச்ச நீத
சிக்கல்-Dinamalar 'ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்; யார் எழுதக் கூடாது' என்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இரு துறைகளின் இயக்குனர்கள், தெளிவான உத்தரவை பிறப்பிக்காததால், பணி நிரந்தரம் ஆக முடியாமல், ஏராளமான ஆசிரியர் தவித்து வருகின்றனர். தமிழகத்தில், 2012ல், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. இந்த தேர்வை யார் எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், பலமுறை தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.அதன்படி, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வு குறித்து, அறிவிப்பு வெளியான, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின், புதிய ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கண்டிப்பாக, டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், மேற்கண்ட தேதிக்கு முன், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை. அதேபோல
காலிப்பணியிடங்கள் மறைப்பு புதிய ஆசிரியர்கள் புலம்பல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் நியமனம் வழங்குவதற்கான 'ஆன் லைன்' கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு 14 ஆயிரத்து 700 புதிய ஆசிரியர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏழு பேருக்கு பணி நியமன உத்தரவை முதல்வர் ஜெ., வழங்கினார். 'மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் 'ஆன் லைன்' கவுன்சிலிங் மூலம் பணியிடங்கள் ஒதுக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. பணியிடங்கள் மறைப்பு : முதுகலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் காலியாக உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் புலம்பினர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'பள்ளிகளில் பாடவாரியாக காலிப்பணியிடங்கள் விபரம் தெரிவிக்கப்படும் என நம்பினோம். ஆனால் பெரும்பாலான பணியிடங்கள் மறைக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான். நாளை (இன்று) வெளிமாவட்ட காலிப்பணியிடங்களுக்கான
'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை' 'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இட
ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தொடங்கியது முதல் நாளில் 906 ஆசிரியர்களுக்கு ஆணை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. முதல் நாளில் 906 முதுகலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் கலந்தாய்வு நடந்தது. இதில் கலந்துகொண்ட 29 பேரில் 4 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் தெரிவித்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாவட்டத்துக்குள் இருக்கும் காலியிடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.