Posts

Showing posts from June 9, 2023
Image
  ஜூன் 12 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்! இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினருக்கான இட ஒதுக்கீடு பற்றி பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Image
  நாடு முழுவதும் மருத்துவராக பணியாற்ற National Exit Test (NExt) என்ற பொதுத்தேர்வு அடுத்தாண்டு முதல் நடத்தப்படும்: ஒன்றிய சுகாதார அமைச்சகம் கஎம்.பி.பி.எஸ். முடித்த மாணவர்கள் மருத்துவராக பணியாற்றவும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் National Exit Test (NExt) என்ற பொதுத்தேர்வு அடுத்தாண்டு முதல் நடத்தப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ். தேர்வை ஒருங்கிணைத்து இந்த நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட உள்ளது. எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளது. இந்தியாவில் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர். இதையடுத்துமருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் National Exit Test (NEXT) என்ற 'நெக்ஸ்ட்' தகுதித் தேர்வை கட்டாயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017-
Image
  12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு; ஜூன் 14-ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் பெறலாம்- எப்படி? 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 11.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 (புதன்கிழமை ) வரையிலான நாட்களில் 14.05.2023 (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்தனர். தனித் தேர்வர்களுக்கு... தகுதியுள்ள தனித்தேர்வர்களும் ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 11.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 ( புதன்கிழமை) வரையிலான நாட்களில் (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்தனர். இதையடுத்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த ம