Posts

Showing posts from December 18, 2013
TRB,TNTET- 2013 :குளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே?ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் குமுறல்!-நிச்சயம் ஏராளமானோர் தேர்ச்சி அடைய வாய்ப்புண்டு. எப்படியாவது அரசு ஆசிரியராகப் பணியாற்றி விட வேண்டும் என்ற கனவில் ஆண்டுக்கணக்கில்தயாராகி வரும் பலருக்கும் அரசின் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தவறானகேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் தேர்வர்கள் தங்களது பணி வாய்ப்பை இழந்துள்ளனர். ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடை பெற்றது.இதில், 6.90 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 4.09 சதவீதம் பேர், அதாவது 14,495 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஆகஸ்ட் 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்வெளியானது.  அப்போது கேள்வித்தாள், விடைகள் சார்ந்து ஆட்சேப மனுக்கள் கோரப்பட்டதுதான் தாமதம் என்பதுபோல,தேர்வு வாரியத்துக்கு 1,500க்கும்மேற்பட்ட புகார்கள் குவிந்தன என்கின்றனர் அதிகாரிகள். அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட அந்த கேள்வித் தாள்களிலும், அதன் விடைகளிலும் ஏராளமான தவறுகள் இரு
நடப்பு கல்வியாண்டுக்கான ( 2013-14 ) 2,695 பணியிடங்களை நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு,  பள்ளிக்கல்வித்துறையில்  PG. -981  BT TAMIL. -115  BT OTHERS -417  P ET -99  ஓவிய ஆசிரியர் -57  இசை ஆசிரியர் -31  தையல் ஆசிரியர் -37  தொடக்கக் கல்வித்துறையில்  இடைநிலை ஆசிரியர் -887  உடற்கல்வி ஆசிரியர் -37  மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TRB PG TAMIL RESULT விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும்?  முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசின்தலைமை வழக்குரைஞர் சோமையாஜிஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது.  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து. வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முதுகலை தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பின் நகல் நேற்று (17.12.13) வரை கிடைக்கவில்லை எனவும் கிடைத்த உடன் டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என தகவலறிந்தவட