14 February 2015

மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கும் 1200 கணினி ஆசிரியர்கள்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும், கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது முதல், தற்போது வரை, கலந்தாய்வு நடத்தாமல், பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதால், 1200 கணினிஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தலைமையாசிரியர்கள், முதுகலை மற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதன், மூலம் விருப்பப்பட்ட மாவட்டம், பள்ளிகளில் மாற்றி, குடும்பத்துடன் சேர்ந்து வாழ வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளாக கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல், தொடர்ந்து ஒரே பள்ளியில் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் குடும்பங்களை பிரிந்து சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், கணினி அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றும், மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் போன்ற பதவிஉயர்வுகளிலும், தேர்வு சமயங்களில் பறக்கும்படை உறுப்பினர் பொறுப்புகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையால், கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக, பணி வரன்முறை கூட இதுவரை செய்யப்படவில்லை. 2

008ல் பணி நியமனம் பெறப்பட்டு, தற்போது வரை கலந்தாய்வு நடத்தவில்லை. திருமணத்துக்கு பிறகும், குடும்பங்களை பிரிந்து தொலைதுார மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, கணினி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர். இப்பணியிடத்திற்கு, ஆட்கள் தேர்வு செய்வதற்கு முன்பு, கலந்தாய்வு நடத்தப்படவேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் முறையாக கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


ஆசிரியர் குறைவு ! : ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்...: தொடக்க கல்வியில் அரசு மெத்தனம்

ஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாகசெயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை சார்பில், 60 தொடக்கப் பள்ளிகள்; 15 நடுநிலைப் பள்ளிகள்; ஒன்பது மேல்நிலைப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள், இயங்கி வருகின்றன.இவற்றில், 25 தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாகவும்; ஏழு நடுநிலைப்பள்ளி கள், தலைமை ஆசிரியர்கள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கை குறைவு
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி, தரம் குறைந்து வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து, தனியார் பள்ளிகளை நாடத் துவங்கி உள்ளனர். இதனால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.இந்த தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் உள்ளூர் ஆசிரியர்கள், பெற்றோரை சமாதானப்படுத்தி, தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என, அறிவுரை கூறி வருகின்றனர்.

எனினும், பொருளாதார நிலையில் கடுமையாக பின் தங்கியுள்ள குழந்தைகளே தற்போது,அதிக அளவில் இங்கு படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்தபட்ச வருவாய் உள்ள பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப துவங்கிவிட்டனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும், காலி பணியிடங்களை நிரப்ப, எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என, கூறப்படுகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப, ஆதிதிராவிடர் நல ஆசிரியர் சங்கம் போராடி வருகிறது.ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரையில், மொத்தம், 210 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; ஆனால், 140 ஆசிரியர்களே இருக்கின்றனர். நடுநிலைப் பள்ளிகளில், 15 தலைமை ஆசிரியர்களுக்கு, எட்டு பேர் தான் உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள், 270க்கு, 258 பேர் உள்ளனர்.

மூடு விழா
மாவட்டத்தில் அதிகபட்சமாக, மதுராந்தகம் தாலுகாவில் மட்டும், 15 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால், ஓராசிரியர் பள்ளிகள் விரைவில் மூடு விழா காணப்படும் என, ஆசிரியர் சிலர் கருதுகின்றனர். இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் ஆறு தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டதோடு, ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், ''மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டி காட்டி, துறைச் செயலர் மற்றும் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது; அரசு, செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இதனால், மாணவர்களின் தொடக்கக் கல்வி தரமாக அமையவில்லை எனில், அவர்களின் எதிர்காலம் இருண்டகாலமாகி விடும் என்ற கவலை அரசுக்கு இல்லை,'' என்றார்.

ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, ஆதிதிராவிடர் நல செயலர், இயக்குனருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். வரும் கல்வியாண்டில், புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பதில் வந்துள்ளது.

அதுவரை, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, ஆதிதிராவிடர் நல செயலர், இயக்குனருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம்.


 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...