Posts

Showing posts from November 30, 2013
TRB PG TAMIL: HEARING ON MONDAY (02.12.13) முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார் . இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் விதித்து வழக்கினை. தனி நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை ஒத்திவைத்தது. அவ் வழக்கு .மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி மற்றும் நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் 21.11.2013 அன்று விசாரணைக்கு வந்தது.  முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்  தேர்வெழுதிய இரு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்
1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை (01.12.2013) குரூப் - 2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது தமிழக அரசின்,பல்வேறு துறைகளில்,காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப்- 2 முதல் நிலைத்தேர்வு நடக்கிறது. 6.65லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)முழுவீச்சில் செய்துமுடித்துள்ளது.   வணிகவரித்துறை உதவி அலுவலர்,தொழிலாளர் நலஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன.   2,269 மையங்கள்:         இது குறித்த அறிவிப்பு,செப்., 4ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.கடைசி தேதிமுடிந்த பின்,விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், 6.65லட்சம் பேரின் விண்ணப்பங்கள், தகுதியானவையாக ஏற்கப்பட்டன. நாளை காலை, 10:00மணி முதல்,பகல், 1:00மணிவரை,மாநிலம்முழுவதும், 2,269 மையங்களில், தேர்வுநடக்கிறது. அனைத்து மையங்களிலும், தேர்வுப்பணியை, வீடியோ பதிவுசெய்ய, டி.என்.பி.எஸ்.சி.,ஏற்பாடு செய்துள்ளது. 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள்,பணியாளர்கள்,தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்