6 September 2015

TNPSC: குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: பாலசுப்பிரமணியன்

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவராக பொறுப்பு வகிக்கும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 213 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வை, 27 ஆயிரத்து 552 பேர் ‌எழுதுகின்றனர். சென்னை எழும்பூரில் தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியன், இதற்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...