Posts

Showing posts from October 9, 2023
Image
 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் மாற்றமா? தேர்தலால் தள்ளிப்போகுதா? அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்படும் என்று தகவல் இணையத்தில் பரவியது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் மே மாதமே நடத்தப்பட்டால், பொதுத் தேர்வு தேதியில் மாற்றமிருக்காது என்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. 18வது மக்களவைத் தேர்தல் 2024ம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Image
 'ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வா'..? 'அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல'..!! மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!! 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி உள்ள மாநிலங்களில் ஆண்டுக்கு 2 முறை வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.  அதாவது, மாணவர்கள் இரண்டு தேர்வு எழுத வேண்டும். அதில், எதில் அதிக மதிப்பெண் எடுக்கப்படுகிறதோ அந்த மதிப்பெண் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு எழுதுவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளார்.  மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 2 முறை வாரியத் தேர்வுகள் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது கட்டாயம் இல்லை. இரண்டு தேர்வையும் எழுத விரும்பினால் எழுதலாம் என்று