16 December 2022

 அதிருப்தி அளிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்.. அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா?





அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தால் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், 'அவுட்சோர்சிங் முறை'யில் பணி நியமனம் செய்ய அரசாணை 115-ஐ செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதோ?என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் நேற்று டிச.15 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட, வரும் 2023ஆம் ஆண்டு போட்டித் தேர்விற்கான அட்டவணையில் குறைந்த எண்ணிக்கையில் பணியிடங்கள் காண்பிக்கப்பட்டுள்ளதால்,அவுட்சோர்சிங் முறையில் (Outsourcing method) பணி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட அரசாணை 115-ஐ செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


குரூப்-1 மற்றும் குரூப்-2 பணியிடங்களுக்கு 2022 ஆண்டிற்கான அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களுடன், 2023ஆம் ஆண்டில் முதன்மைத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சேர்க்கப்படும் என டிஎன்பிஎஸ்சியின் செயலாளர் தெரிவித்தார்.


டிஎன்பிஎஸ்சி 2023ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணையில், குரூப்-4 தேர்வுகள் தவிர்த்து, ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கல்வித் தகுதிகள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். இந்தப் படிப்புகளை முடித்த மாணவர்கள் அரசுப் பணிக்குத் தயாராகி வருகின்றனர்.


மேலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. இதனால், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியைப் பெறுவதற்கும் இளைஞர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.


அவுட்சோர்சிங் முறை: இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மனிதவளத்துறையின் சார்பில் அக்.18 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 115-ல் அரசின் பணியைச் செய்வதற்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் அவுட்சோர்சிங் முறையில் ஆட்களைத் தேர்வு செய்வது குறித்து அறிக்கை அளிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதனிடையே, நேற்று வெளியிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டிற்கான உத்தேச ஆண்டு கால அட்டவணையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்று அதிகளவில் அனுபவம் இல்லாமல் நேரடியாக நிரப்பப்பட வேண்டிய தேர்வுக்கான அறிவிப்புகள் இல்லாமல் உள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன்நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையில் முக்கியப் பதவிகளான குரூப்-1, குரூப்-2 பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும், குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும், அதற்கான தேர்வுகள் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் 12 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதற்கிடையே அவர்களுக்குள் 30% இடங்கள் காலியாக இருக்கிறது.


அதிருப்தியான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்; அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா?


பணிசுமைக்கிடையே அரசாணை-115 அமலா? தலைமைச் செயலகத்தில் 40% பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், ஊழியர்கள் அதிகளவில் பணிச்சுமையுடன் பணிபுரிந்து வருகின்றனர். கடைநிலை பணியிலும் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் அரசாணை 115-ஐ அமல்படுத்தும் விதத்தில் டிஎன்பிஎஸ்சியின் கால அட்டவணை இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படும் வகையில் உள்ளது.


முதலமைச்சர் கவனம் தேவை: 'திராவிட மாடல்' (Dravidian Model) என கூறும் ஆட்சியில், சமூக நீதி என்பது இல்லாமல் போகும் நிலையில் அறிவிப்புகள் உள்ளது. எனவே, கால அட்டவணையில் திருத்தங்களை செய்யவும், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளையும் சேர்த்து வெளியிடுவதற்கு முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை மேற்காெள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.


ரேடியன் ஐஏஎஸ் அகடாமியின் (Radian IAS Academy) நிறுவனர் ராஜபூபதி காணொளி வாயிலாக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஆண்டு கால அட்டவணையில் எந்த ஒரு முக்கியமான தேர்வும் இடம் பெறவில்லை. குரூப்-4 தேர்வும் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, 2024-ல் தேர்வு நடக்கிறது. 2023 ல் முக்கியமானத் தேர்வுகள் எதுவும் இல்லை.


குரூப்-1 போன்ற தேர்வுகள் யுபிஎஸ்சி தேர்வுகள் (UPSC) போன்று ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். குரூப்-1 தேர்விற்கு வயது வரம்பு தளர்வு கரோனா தொற்றால் 2 ஆண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வயது தளர்வு அளிக்காமல் இருப்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படுவர்.


ஏமாற்றத்தில் போட்டித் தேர்வர்கள்: அதேபோல், குரூப்-2 பணிக்குச் செல்வதற்காக அதிகளவில் மாணவர்கள் படித்துக்கொண்டு இருக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்கள், ஆவின், மின்சார வாரியம் போன்றவற்றுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது குறித்த அறிவிப்பும் வராமல் இருப்பதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


திமுக அரசு அமைந்தால் ஆண்டிற்கு ஒரு லட்சம் பேர் நியமிக்கப்படுதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். மேலும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிட்டனர். தற்போது அந்த அரசாணையையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனாலும், அரசாங்க பணியில் அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.


அரசுக்கு கோரிக்கை: அரசு பள்ளி மாணவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் தனியார் துறைக்கு பணிக்கு சென்றால் குறைந்த சம்பளத்தால் பாதிக்கப்படுவார்கள். கரோனா காலத்தில் பணிக்கான தேர்வுகள் இல்லாமல் இருந்தது. கால அட்டவணை தேர்வு பணிக்கு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.


இந்த அட்டவணை ஆண்டு தேர்வு அறிக்கையா, மாதத் தேர்வு அறிக்கையா? எனத் தோன்றுகிறது. அனைவரும் எழுதக்கூடிய போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு இல்லாத நிலைமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தகுந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும்' என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.



 திமுக ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றீர்களே.. என்னாச்சு? -ராமதாஸ்




தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு வைத்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் 2023ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;


அரசுப் பணியாளர் தேர்வாணையம்

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. நான்காம் தொகுதி தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படவுள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.


போட்டித் தேர்வுகள்

 


அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டில் மொத்தம் 11 போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் 8 போட்டித் தேர்வுகள் 2023-ஆம் ஆண்டிலும், 3 போட்டித் தேர்வுகள் 2024-ஆம் ஆண்டிலும் நடத்தப்படும். 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் நான்காம் தொகுதி தேர்வுகளின் மூலம் எத்தனை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. அடுத்த ஆண்டு நவம்பரில் தான் அந்த விவரம் வெளியாகக்கூடும்.


18 வயதைக் கடந்தவர்கள்

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான கல்வித் தகுதிகள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம். இவர்களில் 18 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகம். பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சம் ஆகும். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என தமிழக அரசே தெரிவித்திருக்கிறது.


ஓரளவாவது நியாயமாக

 


அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசு பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டில் 8,000 பேருக்கு கூட வேலை வழங்க வாய்ப்பில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 60,000 பேராவது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் ஓரளவாவது நியாயமாக இருக்கும்.


1754 பேருக்கு

 


ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தேர்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தேர்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது. 2022-ஆம் ஆண்டில் 30 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டில் அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் 11 போட்டித் தேர்வுகளை மட்டுமே அறிவிப்பது நியாயமல்ல.


பாட்டாளி மக்கள் கட்சி

 


மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான தொகுதி 1 தேர்வுகள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வுகள், கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தொகுதி 3ஏ தேர்வுகள் ஆகியவை அடுத்த ஆண்டு நடத்தப் படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இ.ஆ.ப., இ.கா.ப உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படும் நிலையில், தமிழகத்திலும் அதேபோல் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.


வாய்ப்பை இழக்கின்றனர்

 


ஆனால், சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முதல் தொகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாததால் தகுதியும், திறமையும் உள்ள பலர் வயது வரம்பைக் கடந்து அரசு பணியில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர்.


திமுக ஆட்சிக்கு வந்தால்

 


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 விழுக்காட்டினரைக் கூட தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது தமிழ்நாட்டு பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவை கலைக்கும் செயலாகும்.


படித்து விட்டு வேலையில்லாமல்

 


தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அவர்களது திறமைகள் அடிப்படையில் வேலை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப் படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்.

 TNPSC Recruitment: ஓராண்டில் வெறும் 1754 நியமனங்களா? டிஎன்பிஎஸ்சி புதிய வேலைகளை உருவாக்க வேண்டும்- ராமதாஸ்





டிஎன்பிஎஸ்சி மூலம் ஓராண்டில் 1754 நியமனங்கள் போதுமானவையல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. குரூப் 4 தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்பட உள்ளது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.


அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டில் மொத்தம் 11 போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் 8 போட்டித் தேர்வுகள் 2023-ஆம் ஆண்டிலும், 3 போட்டித் தேர்வுகள் 2024-ஆம் ஆண்டிலும் நடத்தப்படும். 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் குரூப் 4 தேர்வுகளின் மூலம் எத்தனை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. அடுத்த ஆண்டு நவம்பரில்தான் அந்த விவரம் வெளியாகக்கூடும்.


வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் 67 லட்சம் பேர்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கல்வித் தகுதிகள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம். இவர்களில் 18 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகம். பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சம் ஆகும். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என தமிழக அரசே தெரிவித்திருக்கிறது.


அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசு பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டில் 8,000 பேருக்கு கூட வேலை வழங்க வாய்ப்பில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தது 60,000 பேராவது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் ஓரளவாவது நியாயமாக இருக்கும்.


மூன்றில் ஒரு பங்கா?


ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தேர்வுகள் மூலம் 1,754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். குரூப் 4 தேர்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது. 2022-ஆம் ஆண்டில் 30 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டில் அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் 11 போட்டித் தேர்வுகளை மட்டுமே அறிவிப்பது நியாயமல்ல.


மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1 தேர்வுகள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள், கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தொகுதி 3ஏ தேர்வுகள் ஆகியவை அடுத்த ஆண்டு நடத்தப் படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இ.ஆ.ப., இ.கா.ப உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படும் நிலையில், தமிழகத்திலும் அதேபோல் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.


ஆனால், சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. 2023-ஆம் ஆண்டில் குரூப் 1, 2, 3 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாததால் தகுதியும், திறமையும் உள்ள பலர் வயது வரம்பைக் கடந்து அரசுப் பணியில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர்.


அரசுப் பணி கனவை கலைக்கும் செயல்


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 விழுக்காட்டினரைக் கூட தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது தமிழ்நாட்டு பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவை கலைக்கும் செயலாகும்.


தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அவர்களது திறமைகள் அடிப்படையில் வேலை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்''.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்

 பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்





தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு, இன்று துவங்குகிறது.


முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.


வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிகின்றன. இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

 நீட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு




நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.



பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்றவற்றில், இன்ஜினியரிங் இளநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், நாடு முழுவதும் பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இது தவிர நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை மற்றும் முதுநிலை சேர்வதற்கு, மத்திய பல்கலை பொது நுழைவு தேர்வு என்ற கியூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை, நேற்று இரவு வெளியிட்டது.


ஜே.இ.இ., மெயின் தேர்வு முதல் கட்டமாக, ஜனவரி 24 முதல் 31 வரை நடக்கிறது. ஜன., 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டம் ஏப்., 6, 8,10, 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.


எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களுக்கான, கியூட் தேர்வு, மே 21 முதல் 31 வரையிலும், வேளாண்மைக்கான ஐ.சி.ஏ.ஆர்., தேர்வு ஏப்ரல் 26,27, 28 மற்றும், 29ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் இதர அறிவிப்புகள், www.nta.ac.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...