28 August 2022

 TN TET தேர்வர்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நாளை நடைபெறுகிறது.!



அரசு பணிக்கான தேர்வை எழுதுபவர்களுக்கு உறுதுணையாக பல இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் மாதிரி வினாத்தாள் முதல் தேர்வு தேதி, அறிவிப்பு மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம்.


அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.


TN TET தேர்வு:


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் பெறப்பட்டது .


பின்னர் TET முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முதல் முறையாக கணினி வாயிலாக நடைபெற உள்ளது.


இந்த தேர்வுக்கு TRB இணையதளம் வாயிலாக 15 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ExamsDaily வலைத்தளம் மூலம் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வு நாளை (29.08.2022) நடைபெற உள்ளது. 

 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்.. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு




ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நடப்பாண்டில் 2955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இனவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கணினி பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் வழி எழுத்து தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்டது. இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஜூலை 4 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது


மேலும் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தமிழ் வழி சான்று பதிவேற்றம் செய்யவும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அனுமதி வழங்கி உள்ளது.


இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இரண்டு நபர்கள் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனை அறிவியல், உயிர் வேதியியல், இந்திய கலாச்சாரம், உடற்கல்வி இயல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணி நாடுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம், ஆளறி சான்றிதழ் படிவம் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு ஆகிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.


தங்களது அழைப்பு கடிதம் ஆளறி சான்றிதழ் மற்றும் இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அவர்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய சுயசான்றொப்பம் இடப்பட்ட நகல் மற்றும் ஆளறி சான்றிதழ் ஆகியவற்றினை சான்றிதழ் சரிபார்ப்பின் போது கொண்டு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் வருகை தராத விண்ணப்பதாரர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் அடுத்த கட்ட பணி தேர்விற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.


விண்ணப்பதாரர்கள் ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதால், அவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதால் மட்டுமே வண்ணாரது இறுதி தற்காலிக தேர்வுக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.


சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் சான்றித சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://forms.gle/ZUY2Ud5wxcapDku6 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்கள் அனுப்ப வேண்டும். ஆட்சேபனை மனு மற்றும் பிறவழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படாது.


மேலும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணி நாடுனர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் செய்திகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர்..!!



அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதன்படி நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


முதல்கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (ஆக. 25) தொடங்கி அக். 23-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.


இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, "பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நான்கு கட்டங்களாக செப்டம்பர் 10 முதல் 13 வரை நான்கு நாட்கள் நடைபெறும்.


அதன்பின் செப்டம்பர் 25-ம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக மூன்று நாட்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து அக்டோபர் 13 முதல் 15 வரை மூன்றாம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும்" என்று கூறினார்.


 TNPSC குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் குறையும். காரணம் இதுதான்!




TNPSC Group 4 VAO exam expected cut off and Vacancy details: தமிழக அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிட அதிகரிப்பு காரணமாக, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.



இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் குரூப் 2 நிலைகளிலும் காலியிடங்கள் அதிகரித்துள்ளன. எனவே குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட, நிரப்பப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது குரூப் 4 தேர்வில் சுமார் 1500 இடங்களுக்கு மேலும், குரூப் 2 தேர்வில் 500 இடங்களுக்கு மேலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக காலியிடங்கள் நிரப்பப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர்.


அதன்படி, இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.


முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 161 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 155க்கு மேலும், BCM பிரிவினருக்கு 158க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 145 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2-3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.


தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 154 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 152க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 150க்கு மேலும், SCA பிரிவினருக்கு 142க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.


சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 148 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 144 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 145க்கு மேலும், SC பிரிவினருக்கு 132க்கு மேலும், BCM பிரிவினருக்கு 142க்கு மேலும், SCA பிரிவினருக்கு 128க்கு மேலும், ST பிரிவினருக்கு 120 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.


ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.


இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...