Posts

Showing posts from April 16, 2023
Image
  பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகள் இணைப்பு பணி தீவிரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணி யாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப் பட்டோர் சீர்மரபினர் நலத் துறை, அறநிலையத் துறை, வனத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்று நடப்பு நிதிநிலை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அப்பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர், தொகுப்பூதிய ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக பணியாளர் விவரங்களை ஏப்.20-க்குள்தாக்கல் செய்ய வேண்டும். பள்ளிகளின் அசையும், அசையாச் சொத்துகள், கட்டடங்கள் உள்
Image
  எல்கேஜி - யுகேஜி வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் கூறும்போது, "அரசு பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறுமா என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்றும், இந்த வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டனர். இதனால் ஆசிரியர் இல்லாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. எனவே அரசுப் பள்ளிகளில் உடனடியாக மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைக்க வேண்டும்" என கூறியுள்ளார். மேலும், "தனியார் பள்ளிகளில் ம
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி.. ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு..!!! ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப் 2, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அதில் சுமார் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது மயிலாப்பூர் ராயப்பேட்டை பிரதான சாலை வி எம் தெருவில் உள்ள இந்திய இளைஞர் சங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் முழு முகவரியுடன் டைப் செய்து 9710375604 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  சென்னை பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் ஏப்ரல் 19 முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தகவல்களை அறிய இந்த இணையத்திலேயே அனைத்து தகவல்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Image
  அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவா் சோக்கை தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவா் சோக்கை திங்கள்கிழமை (ஏப்.17) முதல் தொடங்கவுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) மாணவா் சோக்கை திங்கள்கிழமை (ஏப்.17) முதல் தொடங்கவுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 53 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் ஏப்.28-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.  இந்த நிலையில், தனியாா் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோக்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் மாணவா் சோக்கை ஆண்டுதோறும் தாமதமாக நடைபெறுவது தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாகி வருகிறது.  இந்த தாமதம் பெற்றோா்களிடம் எளிதில் மன மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த நடைமுறை வருங்காலங்களில் தொடரும்பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவா் சோக்கை குறைவதைத் தடுக்க முடியாது என தலைமை ஆசிரி